திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துவளர்த்துவந்தனர். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 14 வயதாகிறது.
அந்தச் சிறுமி குடியாத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி 2 நாட்களுக்கு முன்பு தாய்-தந்தையை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு சென்றபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் மற்றும் திருவண்ணாமலை போலீசாருடன் இணைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள சிறுமியிடம் விசாரித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் தெரிய வந்தது. பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது நகர் பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி வேலை செய்யும் கமலேஷ் என்பவரை (24) கைது செய்து காவல் இதைத்தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தங்க நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர் உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்க வெளியே செல்வதாகக் கூறியவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய கமலேஷை தேடி போலீசார் தீவிரமாக வருகின்றனர். கமலேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி சுபாஷினி என்ற மனைவி. அவர் 8 மாத கர்ப்பிணி ஆக உள்ளார்.



