விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இெந்நிலையில் வெள்ளிக்கிழமை அதே ஊரைச் சோந்த ஏ.தமிழ்ச்செல்வன் (21)மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆகியோர் அய்யனாரிடம் மது குடிக்கலாம் எனக் கூறி, மழவந்தாங்கல் வயல்வெளி
பகுதிக்குதனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் சேர்ந்து அய்யனாரை கல்லால் அடித்துக் கொலை செய்ததோடு, அவரின் ஆடைகளை களைந்து தீயிட்டுக் கொளுத்தி தடயங்களையும் அழித்துவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தமிழ்ச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடாபுடைய சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்குக் கொண்டு சென்றனர்.



