திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் அவர்கள் செல்லும் பாதையில் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களும் இந்த தரைப் பாலத்தை நம்பியை உள்ளனர் எனவே இதனை சரி செய்து தர வேண்டும் என்று கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இதுவரை சுத்தம் செய்யாத காரணத்தால் தண்ணீரில் புழுக்கள் தேங்கி உள்ளன. அதனையும் சீர்செய்து தரவேண்டும் எனவும் மனு அளித்தனர்.



