கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியுடன் பின்னால் வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேரில் சென்னை வடக்கு கோயம்பேடு திருநாவுக்கரசு மகன்பிரசாத்(30), நுங்கம்பாக்கம் அயர்லேண்ட் ஐய்வின் மகன் ஐசக்(32) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கர்ணன், கிரி ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் கர்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிரிக்கு தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



