Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“இலவசம் என்பது தன்மானத்திற்கு எதிரானது” – வேட்புமனுத் தாக்கல் செய்த சீமான் ஆவேசப் பேட்டி!

Balaji by Balaji
30/03/2026
in தமிழ்நாடு
0
Seeman, NTK, Karaikudi

Seeman, NTK, Karaikudi

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

குடும்பத்தாருடன் வருகை

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை தனது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது சொந்த ஊரான காரைக்குடி தொகுதியில் களமிறக்கியுள்ளது. இன்று மதியம் காரைக்குடி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சீமான் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின் போது அவரது தாயார் மற்றும் மனைவி கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர்.

பலமுனைப் போட்டி

காரைக்குடி தொகுதியில் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரபு ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அக்கட்சியின் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

இலவசங்களுக்கு எதிராக ஆவேசம்

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:

“படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவனுக்கு வேலை கொடுப்பதற்குப் பதிலாக, மாதம் 4 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்பவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்? தமிழகம் ஏற்கனவே 10.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. இப்போது அறிவிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். கடன் வாங்கிச் செய்யும் திட்டங்கள் எப்போதுமே தரமாக இருப்பதில்லை.”

மேலும், “இலவசங்களை நான் ஒரு இனத்தின் மகனாக என் தன்மானத்திற்கு எதிரானதாகப் பார்க்கிறேன். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு 10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்திய அரசு இது. இயற்கை வளங்களைச் சுரண்டிவிட்டு, வரிப்பணத்தை உயர்த்தி, அதிலிருந்து இலவசம் கொடுப்பதை மக்கள் ஏன் கையேந்திப் பெற வேண்டும்? மக்களிடம் தற்சார்பு நிலையை உருவாக்க இந்த அரசுகளுக்கு விருப்பமில்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

Tags: Election PromisesFreebiesKaraikudi ConstituencyNaam Tamilar KatchiNTKSeemanSeeman NominationSeeman Press MeetTamil Nadu Election 2026Tamil Nadu Politics
Previous Post

கூட்டணி கட்சிகளை முழுங்கிய தி.மு.க., அதிமுக.,? தேர்தலுக்கு முன்பே சரணடைந்த ‘சில்லறை’ கட்சிகள்?

Next Post

“வெளிப்படையான ஆட்சி, இளைஞர்களுக்கு சம வாய்ப்பு”- வில்லிவாக்கத்தில் மனுத்தாக்கல் செய்த ஆதவ் அர்ஜுனா

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

“15 நாளில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள், முதல்வர் நேரடியாக பதில் சொல்லணும்” – உதயநிதி ஸ்டாலின்

25/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved