திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தனது சொந்த வாக்குச் சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையை தொடங்கி வைத்தார்.
அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பேசுகையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றால் தான் இப்போதைய திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஒவ்வொரு வாக்குச் சாவடியும் தனது வாக்குகளை திமுகவிற்கு முழுமையாக செலுத்தினால் மட்டுமே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று அனைத்து திட்டங்களும் முழுமையாக தடையின்றி கிடைக்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார். மாவட்ட விவசாய அணிதலைவர் அருணகிரி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரவீன் குமார், ஒன்றிய அவைத்தலைவர் குப்புசாமி, ஒன்றிய பொருளாளர் தேவதாஸ், ஒன்றிய துணை செயலாளர் தவமணி முருகேசன், மாவட்ட பிரதிநிதி பண்ணீர் செல்வம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பிரவீனா, கிளைச்செயலாளர் ராஜேந்திரன் சந்திரசேகர், சங்கர், பாக முகவர்கள் சண்முகம், அருள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



