Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கட்சி, மாம்பழ சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

நீதிமன்ற நேரத்தை வீணடிக்ககூடாது என ஐகோர்ட்டு எச்சரிக்கை

admin by admin
21/02/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
கட்சி, மாம்பழ சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையில் மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், நிறுவனர் ராமதாசை தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றம்த்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், உள்கட்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை பா.ம.க.வின் “மாம்பழம்” சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பா.ம.க.வின் உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், “மாம்பழம்” சின்னத்தை முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், “தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை” என்று பதிலளித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதையடுத்து நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

இறுதியாக, உள்கட்சி பிரச்சினை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனக் கூறி, இந்த இரண்டு மனுக்களும் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: அன்புமணி ராமதாஸ்எஸ்.ராமதாஸ்ஐகோர்ட்டுபா.ம.க.
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

Next Post

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved