Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அமைச்சர் எ.வ.வேலு தகவல்

admin by admin
12/12/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை-அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைதுனைத்தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெகிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெசு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் நெடுஞ்சாலைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பு என்பதை அறிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நெடுஞ்சாலைத்துறைக்கு நிறைய நிதி ஒதுக்கி இந்த தமிழ்நாட்டின் கட்டுமானத்தை உயர்த்த வேண்டும் என்று எங்கள் துறைக்கு ஆணையிட்டார். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சரின் சாலை மேம்பாடு திட்டம் என்கிற திட்டம் தொடங்கப்பட்டு இன்றைக்கு போக்குவரத்து நிறைந்த இரு வழிச் சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக நாம் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில் நம்முடைய திருவண்ணாமலை ம ா வ ட்டத்திற்கு தொடர்புடைய மாவட்ட சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றி அமைக்கும் பொருட்டு முதற்கட்டமாக திருவண்ணாமலை-திருக்கோவிலூர் நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்றன.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தை இணைக்கிற திருவண்ணாமலையில் இருந்து நல்லவன்பாளையம், த ண் டராம்பட்டு, தானிப்பாடி, அரூர் வழியாக தர்மபுரி சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது கட்டமாக சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது.

திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலை கணக்கிலே கொண்டு முதல் கட்டமாக 2 கிலோமீட்டர் தூரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10 ஆண்டு காலத்தில் 2200 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை அமைக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தற்பொழுது வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பணிகள் 84 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 770 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் முதலமைச்சரின் சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் இரு வழித் தடங்களிலிருந்து நான்கு வழித் தடங்களாக அகலப்படுத்தும் 6 பணிகள் 37 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.240 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 258 கோடி மதிப்பீட்டில் கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் 62 உயர்மட்ட பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இது போன்று சாலைகளை மேம்படுத்துவதன் மூலமாக பயண நேரம் மிகவும் குறையும், வணிகத்தொழில் மற்றும் சுற்றுலா இதன் மூலமாக வளர்ச்சி பெறும். திருவண்ணாமலையில் விவசாய விளைபொருள்களை எளிதில் சந்தைக்கு கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியும். பள்ளி கல்லூரிகளுக்கு செல்கிற வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திலேயே செல்லமுடியும். இதன் மூலமாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து விபத்துக்களை குறைக்க முடியும். மேலும் இந்த சாலை விரிவாக்கத்தின் மூலமாக அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவாக செல்ல இயலும். இந்த நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு ஆணை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ். கண்காணிப்பு பொறியாளர் முரளி கோட்டப் பொறியாளர் ஞானவேல், உதவிக்கோட்டப் பொறியாளர் அன்பரசு, உதவிப்பொறியாளர்கள் சசிகுமார், செல்வகணேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுசாலைப் பணிகள்திருவண்ணாமலை
Previous Post

தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்

Next Post

தேசிய கீதத்தை பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து உரையை படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved