மாநில பேரிடர் நிவாரண நிதி குறைவாக உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு அதிகமாக உள்ளதால், மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மத்திய, மாநில அதிகாரிகளுடன் நேற்று பார்வையிட்டனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளபதிவில் நாட்டிலேயே 2-வது நீண்ட கடலோர பகுதிகளை கொண்டுள்ளதுடன், கடந்த நூற்றாண்டுகளில் 50 புயல்களை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. அதனால் தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுடன், தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளது. எனவே, இதுவரை இல்லாத இந்த சூழலில் தமிழகம் எதிர் கொள்ள மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று அக்கறையுடன் கோருகிறோம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.