தேர்தலுக்காக நடத்தப்படுகிறது – சே.கு. தமிழரசன்
அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் தேர்தலுக்காக நடத்தப்படுவதாக இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சே.கு.தமிழரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன் நேற்று வந்தவாசியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது
மத்திய பாஜக அரசு 10 வருடத்தில் எந்த விதமான வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை தான் செய்து வருகிறது. அயோத்தி வளர்ச்சிக்காக ஒரு லட்சம் கோடி செலவு செய்த அரசின் முழு கவனத்தையும் அயோத்தியில் மட்டுமே செலுத்தி உள்ளது.
அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் தேர்தலுக்காக நடத்தப்படுவது என்பதனை வெளிப்படையாக காட்டுகிறது. ஜனநாயகத்தில் தவறான முன்னுதாரணத்தினை பாஜக செய்து வருகிறது. இதனால் நாட்டிற்கு வளர்ச்சி ஏற்படும் என்பதனை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
வீட்டு பணிப் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. தற்போது 17 வயது சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. எனவே, கட்டிடத் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா நலத்திட்டம் மூலமாக பணியின் போது மரணம், விபத்து ஏற்பட்டு கைகால் ஊனம் ஏற்படும் போது உதவி தொகை வழங்குவது போல் பணிப்பெண்களையும் அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் இணைத்து பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அல்லாத அணியில் பயணிப்போம் என இந்திய குடியரசு கட்சி முடிவு மேற்கண்டத்தின் பேரில் அதிமுக பாஜகவுடன் இருந்ததால் கூட்டணி ஏற்படுத்தவில்லை கடைசி நேரத்தில் ஏற்பட்ட முடிவின் காரணமாக திமுகவிற்கு ஆதரவு அளித்தோம்.
பாஜகவை எதிர்ப்பதில் எப்பொழுதும் இந்திய குடியரசு கட்சி முழுமையாக உள்ளதால், பாஜக இல்லாத அணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம் என அவர் கூறினார்.
மாநில பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை, மாநில பொருளாளர் சி.எஸ்.கௌரிசங்கர், மாநில அமைப்பு செயலாளர் எம்.மோகன், மாவட்ட தலைவர் எம்.பி. ரவிச்சந்திரன், செயலாளர் பாதிரி பாஸ்கரன், பொருளாளர் எம்.ரமேஷ்பாபு, தலைவர் குட்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.