பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ, உடன் இருந்தார்.
போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
இப்போட்டிகள் 05.10.2025 (நாளை) வரையிலும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 08.10.2025 முதல் 11.10.2025 வரையிலும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் 646 மாணவியர் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 இலட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 இலட்சமும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 இலட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன்,
தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தி.மு.க மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



