Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பிரேதங்களை ஒப்படைக்க தாமதம் உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/10/2024
in மாவட்டங்கள்
0
பிரேதங்களை ஒப்படைக்க தாமதம் உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரேதத்தை கொடுக்க தாமதமானதால் பொறுமை இழந்த சித்தலூரை சேர்ந்த காவியா உறவினர்களும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனின் உறவினர்களும் திடீரென விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சித்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் காவியா (16). இவர் விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு சென்றது. 

இதில் காவியா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் காவியா உடலை பிரேத உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

இதேபோல விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் ( 20 ). இவர் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் ஒரு கைக் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் விபத்தில் இறந்த காவியா மற்றும் பூவரசன் ஆகியோருடைய உடல்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

பிரேத பரிசோதனை முடிந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் உறவினர்களிடம் பிரேதங்களை ஒப்படைக்க காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் உறவினர்கள் ஏன் என்று கேட்டபோது ஆம்புலன்ஸ் இல்லை வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர். 

மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரேதத்தை கொடுக்க தாமதமானதால் பொறுமை இழந்த சித்தலூரை சேர்ந்த காவியா உறவினர்களும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனின் உறவினர்களும் திடீரென விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பிரேதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பிரேதத்தை தூக்கி சென்று விடுவோம் என கூறியுள்ளனர் .

அதனைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வரவைத்து காவியா உடலை அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வர வைக்கப்பட்ட இலவச அமரர் ஊர்தி சேவையில் பூவரசனின் உடல்  அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பிரேதங்களை ஒப்படைக்காததால் ஆத்திரத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhbreaking newstamil news
Previous Post

அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி

Next Post

திட்டக்குடி அருகே பள்ளிப் பேருந்துகள் மோதல் பள்ளி மாணவர்கள் காயம்

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved