Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in இந்தியா
0
‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, என் பேரில் உள்ள இன்னொருவர் வாங்கிச்சென்று விட்டார்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், வருகிற 24-ம் தேதி இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த `ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா’ என்ற பெயர் 56-வது இடத்தில் இடம்பெற்று இருந்தது. இலக்கியம் மற்றும் கல்விக்கான அவரது பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து விருதை ஒருவர் பெற்றுள்ளார் என்று  இன்னொரு அந்தர்யாமி மிஸ்ரா ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மனுதாரர் புவனேஸ்வரில் வசிக்கிறார். இவர், மருத்துவர் மற்றும் எழுத்தாளர். வெவ்வேறு மொழிகளில் 29 புத்தகங்களை எழுதியுள்ளார். அவருக்கு பதிலாக, விருதை பெற்றுக்கொண்டவரோ ஒரு முன்னாள் பத்திரிகையாளர். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் விருதை பெற்றுக்கொண்ட அந்தர்யாமி, தென்கானல் மாவட்டத்தில் வசிக்கிறார். அவர் கூறுகையில், “எனக்கு இந்த வழக்கை பற்றித் தெரியாது. எனக்கு விருது வழங்க, ஒடிசாவில் இருந்து பலரும் பரிந்துரை வழங்கியிருந்தனர். ஆந்திர முன்னாள் கவர்னர் விஸ்வபூஷன் ஹரிச்சரண் கூட எனக்கு பரிந்துரை செய்திருந்தார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான அரசின் கடிதம், என் வீட்டு முகவரிக்கு வந்திருந்தது,” என்றார்.

AlsoRead

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

ஆனால், வழக்கு தொடர்ந்த அந்தர்யாமியின் வழக்கறிஞர் கூறுகையில், “பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உடன், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து எனது கட்சிக்காரருக்கு போனில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த ​​நீதிபதி எஸ்.கே. பானிக்ரஹி, அரசாங்கத்தால் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாக ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்பி உள்ளது.’ என்று தெரிவித்தார். 

இரு தரப்பினரும் ஆதாரங்களுடன், பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை விசித்திர வழக்கு என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags: Odissa High CourtPadmasree Awardtamil news
Previous Post

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

Next Post

தமிழகம் முழுவதும் 30 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

Related Posts

Commercial cylinder supply

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

27/03/2026
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

24/03/2026

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

23/03/2026

வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

23/03/2026

LPG,எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

22/03/2026

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா – இந்தியா வர்த்தகம்: சென்னைக்கு வந்த 1.10 லட்சம் டன் கச்சா எண்ணெய்!

21/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved