Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகள் குறைக்கப்படாது : மத்திய அமைச்சர் அமித்ஷா

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
26/02/2025
in இந்தியா
0
தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகள் குறைக்கப்படாது : மத்திய அமைச்சர் அமித்ஷா
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க., அலுவலகம் திறப்பு விழா பீளமேட்டில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், வணக்கம் நமஸ்காரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையை துவங்கினார்.

ஊழல் ஒழிக்கப்படும்

பின்னர் அவர் பேசியதாவது:-

AlsoRead

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

2025ம் ஆண்டு துவக்கம் டெல்லி வெற்றியோட தான் துவங்குகிறது. 2026ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியோடு தான் துவங்கப் போகிறது. தி.மு.க.,வின் தேச விரோத ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.

2026ல் தமிழகத்தில் நமது ஆட்சி உருவாக போவது உறுதி. தமிழகத்தில் உருவாகப் போகும் நமது ஆட்சி சாதாரண ஆட்சியாக இருக்காது, புதிய யுகத்தை உருவாக்குவதாக இருக்கும். வகுப்பு வாத சிந்தனை முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் நிலவும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் இருக்கும் தேச விரோத சக்தி வேரோடு பிடுங்கி எறியப்படும். பிரதமர் மோடி பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலத்தில் முத்திரையை பதித்து கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேவலமான நிலையில், சீரழிந்து காணப்படுகிறது. பல்கலை உட்பட முக்கியான இடங்களில் கூட பெண்கள் பாதுகாப்பாக சென்று வரக் கூடிய சூழல் இல்லை. வேங்கைவயல் சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

2ஜி வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. தேச விரோத சிந்தனை தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது. மணல் கொள்ளை கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்தோடு நடந்து கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வதில் தி.மு.க., தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றுள்ளனர். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது. தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது.

பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags: amitshahTamil News Today
Previous Post

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

Next Post

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

Related Posts

Commercial cylinder supply

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

27/03/2026
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

24/03/2026

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

23/03/2026

வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

23/03/2026

LPG,எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

22/03/2026

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா – இந்தியா வர்த்தகம்: சென்னைக்கு வந்த 1.10 லட்சம் டன் கச்சா எண்ணெய்!

21/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved