Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செங்கத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம்: 7 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

admin by admin
02/08/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
செங்கத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம்:  7 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செங்கத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமில் 7 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்திம்  “உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முகாமில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, ஒன்றியக் குழு தலைவர் விஜயராணி குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் அதெ.பாஸ்கரபாண்டியன் பேசுகையில் கூறியதாவது:-

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நான்காவது வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு துறைகளின் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட விவரத்தை அறிக்கையாக பெற்று ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றின் மீது கவனம் செலுத்தி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசு வசிக்க வீடற்ற ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் கூறினார். 

செங்கம் கணேசர் திருமண மண்டபத்தில் “உங்களை தேடி, உங்கள் ஊரில் “திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு வேளாண் இடுப்பொருளும், 1 பயனாளிக்கு தார்ப்பாயும்,

மகளிர் சுய உதவிக்குழுவின் சார்பாக 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 50,000 மதிப்பில் தொழிற்கடனுதவிக்கான ஆணைகளையும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக பெற்றோர்களை இழந்த இரண்டு குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூபாய் 4000 நிதியுதவி என நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், செங்கம் பகுதியை சேர்ந்த பள்ளி கல்வியை இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தி பள்ளி புத்தகங்களை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மற்றும் ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி முறை குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் உரையாடி, உணவினை உண்டு தரம் குறித்து பரிசோதித்தார்.

முகாமில், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சரண்யா தேவி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags: செங்கம்திருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

தென் மகாதேவமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மக்களை தேடி செல்வதே திராவிட மாடல் ஆட்சி

Next Post

கலசப்பாக்கம் அடுத்த குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved