Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/02/2025
in இந்தியா
0
முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டெல்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில், புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் 28,500க்கும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்றார். கெஜ்ரிவால் 24,500க்கும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்றார். கடைசி சுற்று முடிவில், 3,800க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.

AlsoRead

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்த தொகுதியில் மூன்றாமிடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டார். தன் தாயார் ஷீலா தீட்சித்தை, அதே தொகுதியில் நேருக்கு நேராக நின்று தோற்கடித்த கெஜ்ரிவாலை, சந்தீப் தீட்சித் பழி வாங்கி விட்டதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிசோடியா தோல்வி

ஜங்புரா தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ.க சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கர்தார் சிங் தன்வார் 38,675 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மணீஷ் சிசோடியா 38,081 ஓட்டுகள் பெற்று, 594 ஓட்டுகள்
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கெஜ்ரிவால் முதல்வரானார். இப்போது 4வது முறையாக அவர் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்து இருப்பது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதிஷி வெற்றி

இதற்கிடையே, கல்காஜி தொகுதியில் தற்போதைய டெல்லி முதல்வர், அதிஷி ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ.க சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், 47 ஆயிரத்தும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்று, அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

Tags: Aam Aadhmi Partyarvind kejriwalDelhi election
Previous Post

கடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Next Post

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் போக்சோவில் கைது

Related Posts

Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026
Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved