இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம் அந்த நாட்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் மட்டுமே. இது பற்றி பார்க்கலாம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய அற்புதமான ஜனநாயகம் கொண்ட நாடு. அதனை விட சிறப்பு இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் கட்டமைப்பு. இந்திய மக்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யும் அரசியல் தலைமைக்கு இந்திய பாதுகாப்பு படைகள் கட்டுப்பட்டே செயல்படும். இந்திய பாதுகாப்பு படைகளால் இந்தியாவிலும், உலகின் வேறு எங்குமே குழப்பம் ஏற்படவில்லை.
இந்திய தலைவர்களும் அதற்கேற்ப மிக, மிக நிதானமான, தெள்ளத்தெளிவான ஆட்சியை வழங்கி வருகின்றனர். இதனால் இந்தியா இன்று உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளின் தீரச்செயலை கடந்த நான்கு நாட்களாக உலகமே பார்த்து வியந்தது. இவ்வளவுக்கும் இந்தியா இவ்வளவு கோபமான சூழலிலும் விதிகளையும், வரம்புகளையும் மீறவில்லை. தீவிரவாதிகளை மட்டும் தான் முதல் நாள் அடித்தது.
இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள் தாக்குதல்களில் அத்துமீறிய பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளையும், அதன் உள்கட்டமைப்புகளையும், ஆயுத கிடங்குகளையும் தாக்கியது. எந்த சூழலிலும் பொதுமக்களை தாக்கவில்லை. ஆனால் பாக் ராணுவமோ அப்பாவி பொதுமக்கள் மீது குறி வைத்து தாக்கியது. இதுவரை பாகிஸ்தான் தாக்குதலில் இந்தியாவில் 22 பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய பாதுகாப்பு படைகளின் தாக்குதல்களில் பாகிஸ்தானின் எந்த அப்பாவி மக்களும் கொல்லப்படவில்லை.
தவிர நான்கு நாள் கடும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், இந்திய தலைவர்கள் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய்தோவல், முப்படைகளின் தளபதிகள், முப்படை தலைமை தளபதி உட்பட முக்கிய தலைவர்கள் தினமும் குறைந்தது 4 முதல் ஐந்து முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தி, நமது பாதுகாப்பு படைகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி வந்தனர்.
அவர்கள் மட்டும் பாதுகாப்பு படைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தால், பாகிஸ்தான் அழிந்து நான்கு நாள்கள் ஆகியிருக்கும். இந்திய தலைவர்கள் யாரும் அப்படி நடந்து கொள்ளவில்லை. தவிர போர் சூழலில் தலைவர்கள் பதுங்குவது தான் வழக்கம். ஆனால் இந்திய தலைவர்கள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வழிகாட்டுதல்கள் வழங்குவதை நொடிக்கு நொடி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தனர். நாட்டு மக்களுடன் அவர்களும் இயல்பாகவே இருந்தனர்.
பிரதமர் மோடி கடந்த ஏப்., 22 பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு தினமும் 2 மணி நேரம் கூட துாங்கவில்லையாம். அதுவும் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர் தினமும் ஒரு மணி நேரம் தான் துாங்குவாராம். சாப்பாடும் கிடையாதாம். பிளாஸ்க்கில் சுடு தண்ணீர் மட்டும் பிரதமர் அருகில் வைத்து விடுவார்களாம். அந்த சுடுதண்ணீரே பிரதமருக்கு ஆகாரமாக இருந்ததாம். கிட்டத்தட்ட உலக நாடுகளின் 150 தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாகிஸ்தானின் அத்துமீறலையும், இந்தியாவின் தடுப்புமுறைகளையும் எடுத்துக்கூறியுள்ளார்.
அந்த அளவு கட்டுப்பாடாகவும், பொறுப்பாகவும் உழைக்கும் தலைவர்களை நாம் பெற்றுள்ளோம். அதே சமயம் இந்த தாக்குதல்கள் நடந்த நேரத்தில் பிரதமர் மோடியின் இமேஜ்.. பல ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இந்திய பாதுகாப்பு படைகளின் நான்கு நாள் தாக்குதல் பொறுப்புமிக்கதாகவும், தார்மீக அடிப்படையிலானதாகவும் அமைந்தது.
அதனால்தான் மோடியின் இமேஜ் அந்த அளவுக்கு உயர்ந்தது. சீக்கிய இளைஞர்கள், இளைஞிகள் என பல லட்சம் பேர் ராணுவத்தில் சேர திரண்டு வந்ததும், மோடிக்கு நாட்டில் எவ்வளவு மரியாதை உள்ளது என்பதை நிரூபித்தது. ஆனால் அவர் இந்த மரியாதையை தக்க வைக்கவோ, தனது இமேஜை வளர்க்கவோ விரும்பவில்லை.
அவர் நினைத்திருந்தால், நொறுங்கிக் கிடக்கும் பாகிஸ்தானை இன்னும் இரண்டு நாள் சேர்த்து தாக்கியிருக்க முடியும். பாகிஸ்தானால் எதிர்தாக்குதல் கூட நடத்த முடியாத அளவு அந்த நாட்டை முடக்கியிருக்க முடியும். எதிரிகள் பலமற்று நிற்கும்போது நாம் வீரமாக தாக்குவது நமது வீரத்துக்கு அழகல்ல என்று நினைத்தார், பிரதமர் மோடி.
அதனால் அவர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததும் உடனடியாக நிபந்தனை இன்றி ஏற்றுக் கொண்டார். இந்த தனிப் பண்பே பிரதமர் மோடியின் இதயத்தில் உள்ள இரக்க குணத்தையும், தன்நாடு மற்றும் தன் அண்டை நாட்டு மக்கள் நலன்களின் அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய பாசத்தையும், பாதுகாப்பையும், மரியாதையான தலைமையின் மாண்பையும் காட்டுகிறது. இப்படிப்பட்ட தலைவர்களை பெற்ற இந்தியர்கள் கொடுத்த வைத்தவர்கள் தான்.
ஆனால் பாகிஸ்தானில் அற்ப தலைவர்கள் தான் அதிகம். அங்கு அரசியல் தலைமைக்கு ராணுவத்தலைமை கட்டுப்படாது. தேவைப்பட்டால் அரசியல் தலைமையை கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அதிகாரத்தை ராணுவத்தலைமை எடுத்துக் கொள்ளும். இதைத்தான் இப்போதும் பாகிஸ்தான் செய்தது. அமெரிக்கா தலையிட்டே நான்கு நாள் தலைமறைவாக வைக்கப்பட்டு இருந்த அந்த நாட்டு பிரதமர் ஷபாஸ் ஹெரீபை மீட்டது.
பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்ததை உலகமே கண்டு அதிர்ந்தது. போர் நிறுத்தம் அறிவித்த பின்னரும், பாக் ராணுவ தலைமை கட்டுப்படாமல் மீண்டும் இந்தியா மீது தாக்கியது. அப்படி இருந்தும் இந்தியா பொறுமையாக இருந்தது. ‘பொறுமை தான் உச்சகட்ட பலம்’ எனவும் இந்தியா உலகிற்கு புரியவைத்தது.
நம் பலத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிய வைத்து, இனிமேல் தீவிரவாதிகள் தாக்கினால் அந்த நிமிடமே போர் பிரகடனம் செய்யப்படும். அந்த தீவிரவாத தாக்குதலே இந்தியாவிற்கு எதிரான போராக கருதப்படும் எனவும் அறிவித்து தன் அசுர பலத்தை காட்டி நிற்கிறது. பாகிஸ்தான் மக்கள் இனியாவது இந்தியாவின் வழியில் தன் நாட்டை நிர்வகிக்க நல்ல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
-மா.பாண்டியராஜ்