பிரதமர் நரேந்திர மோடியால் தீபாவளிப் பரிசாக அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்சாக்லேட், பால்பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் உணவுப் மற்றும் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிராக்டர், கார் போன்ற 375 பொருட்களின் விலைகள் குறைகிறது.
இந்தியாவில் சரக்கு மற் றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. கடந்த 2017-ம் ஆண்டுமத்தியஅரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மக்கள் பயன் படுத்தும் பொருட்களுக்கு5 சதவீதம், 12 சதவீதம், 18சத வீதம் மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு முறையில் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இந்த பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிக அளவில் இருப்பதாகவும், எனவே அவற்றைக் குறைக்க வேண்டும் என்றகோரிக்கை மத்திய அரசிடம் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 15-ம்தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரை நிகழ்த்தினார். அப்போது, தீபாவளி பண்டிகைக்குமுன்னதாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலைகுறை யப்போகிறது.அரசு ஜி.எஸ்.டி. வரியில் பெரிய சீர்திருத்தத்தை கொண்டுவரப் போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இது நாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் தீபாவளிப் பரிசு என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து 4 அடுக்கு வரி விகிதமாக இருந்த ஜி.எஸ்.டி. வரி விகிதம் தற்போது 5 சதவீதம் மற்றும் 18சதவீதம் எனஇரண்டு அடுக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரிகுறைப்பு நடவடிக்கை 22-ம் தேதி (இன்று) முதல் அமலாகும் என மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித் தார். அதன்படி ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 375 பொருட்கள்மீது இன்று முதல் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு மூலம் டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிராக்டர், கார், சாக் லேட், பால் பவுடர், செல் போன்போன்ற பொருட்களின் விலைகள் குறைகிறது. கிட்டத்தட்ட 375 பொருட்களின் விலை குறைகிறது.
இந்நிலையில் டிவி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று மாலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாதாவது: நவராத்திரியின் முதல்நாளில் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள். சுயசார்பு இந்தியாவை நோக்கி மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். முதலீடு குவியும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிக்கும் நாளை (இன்று) முதல் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன.
இன்று முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். விரும்பியதை எளிதாக வாங்கலாம். வரி குறைப்பால் குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். ஜி.எஸ்.டி. அமலாக்கம் நாட்டின் பெரியவரி சீர்திருத்தம். தற்போது வரி கட்டமைப்பு எளிமைபடுத்தப்பட்டு உள்ளது. இந்த சீர்திருத்தம் நாட்டின் சேமிப்புத் திருவிழா. பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளினால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜி.எஸ்.டி.யால் அகன்றன. ஜி.எஸ்.டி.க்கு முன்னர் மாநிலங்களுக்கு இடையே பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்கள் இருந்தன. சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.
ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவு நனவானது. ஜி.எஸ்.டி.க்கு முன்னுரிமை அளித்தோம். அதில், அனைத்து மாநிலங்களும் இதில் சம பங்குதாரர்களாக இருப்பார்கள். நாளை முதல் ஜிஎஸ்டி வரி அடுக்கில் இனிமேல் 2 விதங்கள் தான் இருக்கும். 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பில் வந்துள்ளன. உணவு, மருந்து, பல்வேறு விட்டு உபயோக பொருட்களின் விலை இனி குறையும். சிக்கலான வரி கட்டமைப்பில் இருந்து நுகர்வோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து விடுவித்து முன்னேற்றி உள்ளோம். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் துவங்குகிறது.
காலமும் தேவையும் மாறும்போது மாற்றத்தை ஏற்பது அவசியம். வருமான வரியிலும், ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். நடுத்தர மக்கள் இனி எளிதாக தங்களது இலக்குகளை நிறைவேற்றுவார்கள். இந்த வரி சீர்திருத்தத்தால் சிறிய கடைக்காரர்கள் கூட பலன் அடைவார்கள். மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும். டிவி, டூவீலர்கள். கார்கள் உள்ளிட்டவற்றை எளிதாக வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை நுகர்வோர்களுக்கு கொண்டு செல்ல வணிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும். சுய சார்பு இந்தியாவே இந்த நேரத்தில் தேவையாக உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு சிறு குறு நடுத்தர அளிக்கின்றனர்.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்துறையினர் ஊக்கம் ஒவ்வொரு வீட்டிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளும் அந்த பொருட்களை விற்க வேண்டும். சுதேசி 2.0 இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுய சார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும். உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டது, நாட்டு மக்களுக்கு அரசு வழங்கிய முதல் பரிசு. இப்போது இரண்டாம் பரிசாக, ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கப்பட்டுள்ளது.



