Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

NCERT 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை

அச்சு, டிஜிட்டல் பதிப்புகள் நீக்கம் உத்தரவு

Balaji by Balaji
27/02/2026
in இந்தியா
0
NCERT Book Controversy

NCERT Book Controversy

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடப்பகுதியை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, பாடப்பகுதியின் உள்ளடக்கம் தொடர்பாக நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். சம்பந்தப்பட்ட அத்தியாயத்தை தயாரித்தவர்கள் இனி பாடப்புத்தக குழுவிலோ அல்லது கல்வித்துறையிலோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். சந்தைக்கு அனுப்பப்பட்ட 32 புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. முழுப் புத்தகமும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்‌வி மற்றும் கபில் சிபல் ஆகியோரும் ஆஜரானார்கள்.

அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

  • நீதித்துறையில் ஊழல் குறித்த அத்தியாயத்துடன் வெளியான 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

  • அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் அந்தப் புத்தகத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

  • மத்திய கல்வித்துறை செயலர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலும், மத்திய அரசும் இதுதொடர்பான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்கள், உத்தரவை நடைமுறைப்படுத்திய விவரங்களுடன் 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், இந்தப் புத்தகத்தை அச்சிடவோ அல்லது டிஜிட்டல் வடிவில் பகிரவோ கூடாது என்றும், தடையை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: CBSE Curriculum UpdateClass 8 Social Science UpdateEducation Ministry IndiaEducation News IndiaIndian Education PolicyIndian Judiciary NewsJudiciary Corruption ChapterNCERTNCERT Class 8NCERT News 2026NCERT Social Science BookNCERT Textbook BanSchool Textbook ControversySupreme Court BanSupreme Court of India
Previous Post

தமிழக தேர்தல் இலவசங்கள்: தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Next Post

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் – தமிழக அரசியலில் புதிய திருப்பம்

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved