பகிஸ்தான் பிரதமர் ஒரு கோழை என்று அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி., பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியா தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி, ஒன்பது முகாம்களை அழித்தது. அந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா பாகிஸ்தானின் வான்நிலையம் ஒன்றை தகர்த்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் நேற்று இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளில் நேற்று டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், அந்த அனைத்து டிரோன் தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடித்து அழித்தது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும், பாகிஸ்தான் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் எதிர்க் கட்சி எம்.பி. ஒருவர் அந்நாட்டு பிரதமரை கடுமையாக சாடியுள்ளார். அதிலும், அந்த எம்.பி. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தினுள்ளேயே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை என சாடியுள்ளார்.
அவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசியதாவது; “இந்தியாவுக்கு எதிராக ஒரு கருத்தும் இதுவரை வரவில்லை. அரசு தைரியமாக சண்டையிடும் என எல்லையில் ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். ஆனால், உங்கள் தலைவர் ஒரு கோழை, மோடியின் பெயரைக் கூட உச்சரிக்க முடியாதவர். எல்லையில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.