Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மருத்துவப் படிப்பில் 75ஆயிரம் இடங்கள் அதிகரிக்க இலக்கு : பிரதமர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
05/03/2025
in இந்தியா
0
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் 75 ஆயிரம் இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

பட்ஜெட்டிற்கு பிந்தைய வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வளர்ந்த பாரதம் என்பதற்கான திட்டத்திற்கான மையக்கருத்தாக மக்களின் பொருளாதாரம் மற்றும் புதுமையான முன்னெடுப்புகளில் முதலீடு உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக வந்துள்ளது. முதலீட்டில்,உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மக்கள், பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் புதுமையான முன்னெடுப்புகளுக்கும் அதேமாதிரியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ., ஆராய்ச்சிக்காக தேசிய அளவில் பெரிய மொழி மாதிரி( Large Language Model -LLM) அமைக்கப்படும். இந்த துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். சுற்றுலாத்துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும். நாட்டின் ஜிடிபி.,யில் சுற்றுலாத்துறைக்கான உள்கட்டமைப்பு அதிகரிக்கப்படும். மக்கள் முதலீடு செய்வதற்கான தொலைநோக்குப் பார்வை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் என்ற 3 தூண்களைச் சார்ந்து உள்ளது.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கல்வி அமைப்பு பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐஐடி.,க்கள் விரிவாக்கம், கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது, ஏஐ.,யின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது, பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது, பாடங்களை 22 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வது என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2014க்கு பிறகு 3 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ நிறுவனங்களை மேம்படுத்துவதுடன், திறமைக்கான மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு உள்ளோம். இந்த பட்ஜெட்டில், மருத்துவ படிப்பில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ துறையில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags: medical educationNarendramodiPrime Minister
Previous Post

கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி : இது கும்பமேளா ஆச்சர்யம்

Next Post

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள் : முதலமைச்சர்பளீர்

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved