Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/04/2025
in இந்தியா, தமிழ்நாடு
0
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குகளைத் தாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் என இரண்டு வழக்குகளை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் தொடர் இறுதி விசாரணைக்குப் பிறகு பிப்ரவரி 10-ம் தேதி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தது.

மேலும் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் தான் நிறுத்தி வைக்கும் மசோதா செல்லாது எனக் கூறும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடாது என்பதே விதி என்றும், ஆளுநருக்குத் தன்னிச்சையான வீட்டோ அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது என்றும் கூறியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்துகொள்ளவில்லை எனத் தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், விதிகள் அடிப்படையில் ஆளுநர் செயல்படாமல் இருந்துள்ளார் என அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் பொதுவான விதியின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவு அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முடிவை, ஆளுநர் ஒரு மாதத்தில் எடுக்க வேண்டும் என்றும், அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அந்த முடிவை 3 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கான காலக்கெடுவை விதித்து உச்சநீதிமன்றம் முதல்முறையாகத் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன,

தமிழ்நாடு அரசு 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும்.

ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி சுயேட்சையாக செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் .

தமிழக அரசின் மசோதாக்கள் சிலவற்றுக்கு 3 வாரத்திலும் மற்றவைகளுக்கு ஒரு மாதத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும்.

ஆளுநர் ரவிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவே முடியாது; நிர்பந்திக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் நிரகாரிப்பு.

Tags: Supreme CourtTamilnadu News
Previous Post

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Next Post

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம் : சீமான் கல..கல..

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved