தருமபுரி புதிய பேருந்துநிலையத்திற்கு பேருந்துகள்செல்வதால்அனைத்துபொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் நடைபெற்றுது.
தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்வதால் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் நிறை வேற்றப்படும்வரையில் தற்காலிகமாக நான்குரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி பயணிக்கும் நேரம் அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் நான்கு சந்திப்பில் நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமத்தை கருத்தில்கொண்டும், சிறுவியாபாரிகள்,பொதுமக்கள் ஆகியோரின் நலனை கருத்தில்கொண்டு இன்று (09.02.2026) முதல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும், நகர்பேருந்து நிலையத்தை ஒட்டிய
ஏற்கனவே இயங்கிவந்த புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கதெரிவிக்கப்படுகிறது.
பேருந்து கட்டணம் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஷேர்ஆட்டோ மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் கட்டணம் முறைப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில்,தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் கயதிரி, பொது மேலாளர் க.செல்வம் தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகராட்சி ஆணையர் இரா.சேகர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



