Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நவ. 4 முதல் கணக்கெடுப்பு, டிச.9-ல் வரைவுப் பட்டியல் தமிழகம், 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்

தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin by admin
28/10/2025
in இந்தியா, செய்திகள்
0
நவ. 4 முதல் கணக்கெடுப்பு, டிச.9-ல் வரைவுப் பட்டியல் தமிழகம், 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று தெரிவித்தார்.

நவம்பர் 4 ம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்றும், வரைவுப் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைத் தோதல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே இரு உயாநிலைக் கூட்டங்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதாவது, செய்தியாளர் “பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய மாநிலங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது. 36 மாநிலங்களில் உள்ள தேர்தல் அலுவலர்களுடன் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.

இதன்படி, இரண்டாம் கட்ட வாக்காள; பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அந்தமான், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நவ. 4 முதல் கணக்கெடுப்பு 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 10.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இன்று முதல் நவம்பர் 3 வரை படிவங்கள் அச்சடிப்பு, அதி காரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். நவம்பர் 4 ம் தேதி முதல் கணக்
கெடுப்புப் பணிகள் தொடங்கும். வரைவுப் பட்டியல் டிசம்பர் 9 ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும்.
அஸ்ஸாமில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான தேதி தனியாக அறிவிக்கப்படும்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
3 முறை சோதனை கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு அதிகாரிகள் நியமிக்கப்படுவார். வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து சோதனை செய்வார்கள்.

இன்று நள்ளிரவு முதல் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நிறுத்தப்படும். இனி சிறப்பு தீவிர திருத்தம் மூலமே 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டிய பட்டியலில் திருத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளக்க வேண்டும்.
பிறந்த தேதி அல்லது இருப்பிடத்திற்கான சான்றாக ஆதார் அட்டையை ஏற்க முடியாது. ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல, இருப்பினும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அடையாளச் சான்றாக அளிக்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.

Tags: தலைமை தேர்தல் ஆணையர்வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்
Previous Post

சேறும் சகதியாய் சிதைந்த சாலை: பொதுமக்கள் சீரமைப்புக் கோரிக்கை

Next Post

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு திராவிடம்தான் காரணம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved