திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, பேரூராட்சியில் உள்ளதோமினிக்சாவியோமேல் நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கொமானந்தல், வட்டார மருத்துவமனை சார்பில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், தலைமை தாங்கினார். செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின், சேத்துப்பட்டு தாசில்தார் அகதீஸ்வரன், நகர திமுக செயலாளர் முருகன், செயல் அலுவலர் (பொ) ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், வேலு,ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ், வரவேற்றார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணி வேந்தன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே கம்பன் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து. மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக சிகிச்சைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், 2 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, 1 பயனாளிக்கு தையல் இயந்திரம், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆரணி தொகுதி எம்.பி. தரணிவேந்தன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், ஆகியோர் வழங்கி தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்கள்.
முகாமில் சேத்துப்பட்டு, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முன்னதாக உணவு பாதுகாப்பு, காச நோய் தடுப்பு, எய்ட்ஸ் தடுப்பு, டெங்கு மலேரியா தடுப்பு, விழிப்புணர்வு அரங்குகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. முகாமில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மருத்துவர்கள். செவிலியர்கள், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



