திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு ஊராட்சிகளுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மிருளானிணி, மரியதேவ்ஆனந்ந் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பேசுகையில், உலகில் மக்களிடம் சென்று மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் பொது மக்களின் இல்லத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உடனுக்குடன் தீர்த்து வைக்கும் வரலாற்று போற்றக்கூடிய திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி நிறைவேற்றி வருகிறார். முன்பொரு காலத்தில் அதிகாரிகளை தேடிச் சென்று தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வந்த காலம் மாறி தற்பொழுது அதிகாரிகளே பொது மக்களின் இல்லங்களுக்கு தேடிச்சென்று மனுக்களை பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறார்கள் என்று பேசினார்.
மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை செங்கம் ஒன்றியத்தில் இதுவரை 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து கோரிக்கைகளும் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 10% கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் செங்கம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மனோகரன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், திமுக நிர்வாகிகள் காயம்பட்டு செந்தில்குமார், திருஞானம், சிவக்குமார், தினகரன், இளைஞர் அணி பாக்கியராஜ், மாதையன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.



