கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில்உள்ளகொட்டக்குளம், மேல்முடியனூர், முத்தனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழாவில்வட்டார வளர்ச்சி,அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், வட்டாட்சியர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், முனியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சுந்தரம், பூங்காவனம் ஜெயராஜ், வள்ளி சம்பத், ஒன்றிய துணைச் செயலாளர் ஜப்திகாரியந்தல் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் அணி ஒன்றிய அமைப்பாளர் பிரகலநாதன். சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் நியாமத்துல்லா, இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் வடமாத்தூர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



