Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வீராணம் ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்

admin by admin
05/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
வீராணம் ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கடலூர் மாவட்டம், லால்பேட்டை வீராணம் ஏரிப்பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ளத் தடுப்பு பணியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோயில்சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதியும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் கூடுதலாக சுமார் 40,000 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

வீராணம் ஏரியின் மூலம் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 74 கனஅடி வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரிக்கு கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் 2024இல் அதிகபட்சமாக 30,000 கனஅடி வெள்ளநீர் வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரி நிரம்பிய நிலையில், கதவணைகளின் அளவைத் தாண்டி, திடீரென வெளியேறியதால், வடிகால் வாய்க்கால் கரைகள் சேதமடைந்து அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள நீர் உட்புகுந்து அதிகப்படியான சேதம் ஏற்பட்டது.

இவ்வாறான எதிர்பாராத வெள்ள சேதங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வீராணம் ஏரிக்கு ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ளத் தடுப்பு பணி மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டார்கள்.அதனடிப்படையில் இன்றைய தினம், ரூ.29 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியில் கூடுதல் நீர்போக்கி அமைத்தல், வெள்ளத் தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக நீர்போக்கிகள் அமைத்து கட்டும் போது, ஏரிக்கு வரும் அதிகப்படியான வெள்ள நீரினை ஏரிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் எளிதாக வெளியேற்றவும் வடிகால் வாய்க்கால் கரைகள் உடையாமல் பாதுகாக்கவும் முடியும். அருகிலுள்ள கிராமங்களில் வெள்ளநீர் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும்.அத்துடன் வீராணம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதுஇதன் மூலம் இப்பகுதியில் வளர்ச்சி ஏற்படுவதுடன் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்கடலூர் மாவட்டம்
Previous Post

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 498 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நலத்திட்ட உதவிகள்;

Next Post

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved