Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆன்லைனில் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை உட்பட மகன்கள் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/01/2025
in தமிழ்நாடு
0
ஆன்லைனில் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை உட்பட மகன்கள் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூரில் தாய் மற்றும் மகளிடம் ரூ ஒரு கோடியே 23 லட்சம் ஏமாற்றிய தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் தண்டலை அருகே தியானபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி மனைவி கமலா (55). இதேபோல் அதே ஊரில் வசித்து வருபவர் ரெங்கநாதன் மனைவி மீனாம்பாள். 

இருவரது குடும்பமும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கமலாவிடம் அதிக அளவில் தொகை இருப்பதை தெரிந்து கொண்ட ரெங்கநாதனின் மகன்களான ஹரிஹரசுதன் (33)மற்றும் ராம்ஜி (31) இருவரும் கமலாவிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து கடந்த 2020 ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரையில் ரூ ஒரு கோடியே 23 லட்சம் அளவில்தொகை பெற்றுள்ளனர். 

மேலும் இவ்வாறு பெரும் தொகையினை நம்ப வைக்கும் வகையில் கமலாவின் மகளான நிஷாந்தி என்பவரின் வங்கி கணக்கிற்கு அவ்வப்போது சிறு, சிறு தொகைகளை லாபம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். 

அதன் பின்னர் சந்தேகம் ஏற்படவே தொகையை கொடுக்குமாறு  கமலா கேட்டபோது, சிறிது காலத்தில் கொடுத்து விடுவதாகக் கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி தொகை பெற்றதற்காக  சகோதரர்களில் ஒருவரான ராம்ஜி என்பவர் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். இதற்கு சாட்சியாக அவரது தாய் மீனாம்மாள் மற்றும் தந்தை ரெங்கநாதன் ஆகியோர் கையெழுத்துட்டுள்ளனர்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

ஆனால் தெரிவித்த காலத்திற்குள் தொகை கொடுக்காததால், இது குறித்து  கமலா  திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில்   கடந்த மாதம் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்படி ரெங்கநாதன் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கமலாவிடம் பெற்ற தொகையினை திருவாரூர் மற்றும் சென்னையில் வீடு மற்றும் வேறு சில சொத்துக்களும் வாங்கி இருப்பது தெரிய வந்ததுடன், இதேபோன்று மேலும் பலரிடமும் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து நேற்று முன்தினம் ரெங்கநாதன், ஹரிஹரசுதன் மற்றும் ராம்ஜி மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: Cyber CrimeOnline FraudTamil News TodayTiruvarur News
Previous Post

பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Next Post

கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் தொடர் போராட்டம்

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved