Saturday, August 8, 2026
31 °c
Tiruvannamalai
31 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

admin by admin
08/08/2026
in தமிழ்நாடு
0
தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழக எம்.பி.க்களின் கருத்துகளை அறிய இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதனால் மொத்தம் 37 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலா 2 எம்.பி.க்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்.பி. என மொத்தம் 19 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. சுதா மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்.பி.க்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

AlsoRead

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராகவும், மசோதாவை கைவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், “முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர் எண்ணிக்கையும், தமிழகத்திற்கான 39 தொகுதிகளும் தொடர வேண்டும். தொகுதி மறுவரையறை மூலம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடாது என்பதே கூட்டத்தின் ஒருமித்த கருத்தாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அவையின் செயல்திறன் பாதிக்கப்படும்,” என்றார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “தொகுதி மறுவரையறையால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளோம். மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர் எண்ணிக்கையும், தமிழகத்திற்கான 39 தொகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தினால், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பே குறைந்து விடும்,” என்றார்.

Tags: எம்.பி.க்கள் கூட்டம்தீர்மானம்முதல்வர் விஜய்
Previous Post

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

Related Posts

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

08/08/2026
தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

08/08/2026

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

08/08/2026

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

08/08/2026

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

06/08/2026

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு

06/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:
  • “அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”
  • தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”
  • தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:
  • காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved