Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை பணி: அமைச்சர் எ.வ.வேலு துவக்கம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/01/2025
in தமிழ்நாடு
0
ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை பணி: அமைச்சர் எ.வ.வேலு துவக்கம்
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில், ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி இரண்டு வழி நெடுஞ்சாலையை, நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

அப்போது பேசிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளின் முக்கியத்துவம் கருதி, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகள் 2,200 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2024-25 ஆம் நிதியாண்டில் 254.32கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3ஆண்டுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 227 பணிகள் ரூ. 412 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் 57 பணிகளுக்கு ரூ. 154 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர மண்சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக முதல்வர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பின்படி சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் விபத்துகளை குறைக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் முறையில் சிறப்பு தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணி ரூ.207 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. அதே போன்று திருச்செங்கோடு பைபாஸ் அமைக்கும் பணி ரூ.124 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 1,281 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தரைமட்ட பாலங்கள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என கூறினார்.

முன்னதாக, திருச்செங்கோடு நகரில் பைபாஸ் ரோடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி அமைச்சர் எ.வ.வேலு துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: DMKMinister VeluNamakkal News
Previous Post

2025-26ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 % வரை இருக்கும் : நிதி அமைச்சர் ஆய்வறிக்கை

Next Post

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved