Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
09/02/2025
in தமிழ்நாடு
0
mkstalin

mkstalin

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையின் இலக்கணமாகச் செயல்பட்டு, கழகத்தின் வெற்றிக்காக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணியை மறக்க முடியாது. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் தி.மு.க.வின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021-ஆம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி! தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழ்நாடு பார்த்து விட்டது.

2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியானது தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. படுதோல்வியை அடைவதும் தொடர்கதையாக அமைந்தது. எனவே தேர்தல் களத்துக்கே வராமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கிவிட்டது.

தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமலும் போன அ.தி.மு.க. இன்று மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மையாகும்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பொருத்தவரையில் மூன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்கள்முன் வைத்தோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்ட முறையில் பயனடையும் திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அனைவரும் நேரடியாக உணர்ந்துள்ளார்கள்.

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது. மகத்தான திட்டங்களைத் தரும் தி.மு.க. அரசுக்கு, மகத்தான வெற்றியைத் தர மனமுவந்து மக்கள் முடிவெடுத்தார்கள்.

தங்களது பெரிய எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரகுமாரை, வெற்றி வேட்பாளராக ஆக்கி – சட்டமன்றத்துக்குள் அழைத்து வர உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்து தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவார்.

எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம்!

ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம்.

மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: arunaitamizhDMKErode ByElectionMKStalinTamilnadu News
Previous Post

டெல்லியில் ஆட்சி மாற்றத்தால் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த திடீர் உத்தரவு

Next Post

சிறுவர்கள் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாட தடை

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved