Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மெட்ரோ இரயில் நிலைய மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வரும் 1ம் தேதி முதல் நிறுத்தம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/01/2025
in தமிழ்நாடு
0
மெட்ரோ இரயில் நிலைய மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வரும் 1ம் தேதி முதல் நிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வரும் 1ம் தேதி முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனவரி 2025-இல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

மெட்ரோ இரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணஅட்டை ( Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டனாக 11 மெட்ரோ இரயில் நிலையங்களில் நிறுத்தம்

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

மெட்ரோ இரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 01.04.2025 முதல் SBI வழங்கிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA – நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய்நகர் ஆகிய 11 மெட்ரோ இரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மேற்கூறிய மெட்ரோ இரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags: chennaichennaimetrocmrlmetrorail
Previous Post

‘உங்களை நம்பியே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்’ : நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேச்சு

Next Post

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved