Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“கெஜ்ரிவால் ஃபார்முலா தமிழகத்தில் பலிக்காது” – கோவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

"தமிழ்நாடு அணி Vs டெல்லி அணி"

Balaji by Balaji
27/02/2026
in தமிழ்நாடு
0
DMK Coimbatore Conference

DMK Coimbatore Conference

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கோவை: “மக்களால் புறக்கணிக்கப்படும் பாஜக, அதிமுகவை தனது கிளைக் கழகமாக மாற்றி தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. அவர்களின் எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் மாநாட்டில் பேசினார்.

மேற்கு மண்டல திமுக பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதிமுக கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஜெயலலிதா புகழ் பாடும் மோடி: ஸ்டாலின் கேள்வி

பிரதமர் மோடி திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடுவது குறித்து விமர்சித்த முதல்வர், “குஜராத் மோடியா? இந்த லேடியா? என சவால் விட்டவர் ஜெயலலிதா. அவர் மீது இப்போது திடீர் பாசம் ஏன்? அதிமுக அரசுதான் ஊழல் அரசு என்று அமித் ஷா கூறியதை மக்கள் மறக்கவில்லை. சொந்தமாகச் சொல்லிக் கொள்ள சாதனை இல்லாததால், ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கப் பார்க்கிறார்கள்” என்றார்.

தமிழகத்திற்கு இழைக்கப்படும் நிதித் துரோகம்

ஒன்றிய அரசு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களைப் புறக்கணிப்பதாகப் பட்டியலிட்ட முதல்வர், பின்வரும் கேள்விகளை எழுப்பினார்:

  • கோவை, மதுரை மற்றும் திருச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஏன் இன்னும் அனுமதி வழங்கவில்லை?

  • ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி எங்கே?

    AlsoRead

    மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

    அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

    சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

  • பள்ளிக் குழந்தைகளுக்கான ரூ. 3,500 கோடி S.S.A. நிதி மற்றும் ஜல்ஜீவன் திட்ட மானியங்களை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள்?

  • ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் மின் பகிர்மானக் கழக நிதி என தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முடக்கி, செயற்கையான நிதி நெருக்கடியை பாஜக உருவாக்குகிறது.

“பழனிசாமி ஒரு ‘லேபர்’; ரிங் மாஸ்டர் பாஜக”

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் கடுமையாகச் சாடிய ஸ்டாலின், “பாஜக எனும் ஓனரிடம் பழனிசாமி ‘லேபர்’ ஆகச் சேர்ந்துள்ளார். இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. சர்க்கஸ் கூடாரத்தைப் போல தேர்தல் முடிந்ததும் இந்தக் கூட்டணி கலைந்துவிடும். இந்த என்டிஏ சர்க்கஸின் ‘ரிங் மாஸ்டர்’ பாஜக என்றால், அவர்கள் சொன்னபடி வித்தை காட்டுபவர் பழனிசாமி” என்று விமர்சித்தார்.

கெஜ்ரிவால் ஃபார்முலா தமிழகத்தில் பலிக்காது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் கழித்த நாட்களை பாஜகவால் ஈடு செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், “அதே ஃபார்முலாவை ஏவல் துறைகளை வைத்து தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள். மிரட்டல்களுக்குப் பயப்பட நாங்கள் ஒன்றும் அடிமைகளோ, கோழைகளோ அல்ல” என்று முழங்கினார்.

கொள்கை ரீதியான கூட்டணி

திமுக தலைமையிலான கூட்டணி 2019 முதல் இன்று வரை கொள்கை உறுதியுடன் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், “தமிழ்நாடு தேர்தல் வரலாற்றிலேயே நீண்ட காலம் ஒற்றுமையுடன் தொடரும் கூட்டணி இதுதான். இது திராவிடம், காந்தியம், மார்க்சியம் மற்றும் அம்பேத்கரியம் என அனைத்துக் குரல்களையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி” என்றார்.

இறுதியாகப் பேசிய அவர், “இது பாஜகவின் ‘டப்பா என்ஜின்’ அணிக்கும், தமிழ்நாட்டின் ‘சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின்’ அணிக்கும் இடையிலான போட்டி. இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது ‘தமிழ்நாடு அணி’ தான்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Tags: 2026 Assembly Election TNArvind Kejriwal JailCM Stalin SpeechDMK Coimbatore ConferenceDMK vs BJPEPS BJP AllianceGST Compensation Tamil NaduMetro Rail Project TNMK StalinTamil Nadu News
Previous Post

“AI  யுகத்திலும் அழியாத 10 வேலைகள்” – Zoho ஸ்ரீதர் வேம்பு பட்டியலிடும் ‘மனிதநேய’ பணிகள்!

Next Post

‘தாய் கிழவி’ – பாசமும் பகையும் கலந்த நகைச்சுவை விருந்து!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved