Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சொந்த ஊர் போற சென்னை மக்களே! உங்களுக்கு தான் இந்த செய்தி!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in தமிழ்நாடு
0
சொந்த ஊர் போற சென்னை மக்களே! உங்களுக்கு தான் இந்த செய்தி!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2024ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணிந்திரரெட்டி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக். 28ஆம் தேதி முதல் அக். 30ஆம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11 ஆயிரத்து 176 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு பின் – 12,606 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், அதாவது நவ. 2ஆம் தேதி முதல் நவ. 4ஆம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்திற்கு 24 மணிநேரமும் பேருந்து வசதி

தீபாவளிக்கு முன்பு அதாவது அக். 28ஆம் தேதி முதல் அக். 30ஆம் தேதி வரையில் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்  கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்” என தெரிவித்தார். எனவே, இந்த மார்க்கங்களில் செல்லும் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும், “காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி, கிழக்கு கடற்கரை (ECR) மார்க்கமாக செல்லும் பேருந்து கோயம்பேட்டில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதே நேரத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், மாதவரம் பேருந்து நிலையத்திற்கும் செல்ல மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படும்” எனவும் தெரிவித்தார். 

பேருந்து முன்பதிவு செய்ய

மேலும், முன்பதிவு செய்ய கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி இணையதளம் மூலமும், செயலி மூலமும் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

வழித்தட மாற்றம்

அதேபோல், கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மகாபலிபுரம் சாலை (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தட மாற்றம் குறித்து தனிப்பட்ட வாகனங்களில் ஊர் திரும்புவோர் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார். 

Tags: arunai thamizharunaitamizhbusdeepavalideepavali specialdialidiwali special bustamil nadutamil newsTNSTCTNSTC NEWS
Previous Post

மீண்டும் மீண்டும் தானாக வந்து சிக்கும் யூடியூபர் இர்ஃபான்! வாழ்த்துக்கள் கிடைக்கல வழக்குகள் தான் கிடைக்குது !

Next Post

என்எல்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்! சிபிஎம் மாநாடு கோரிக்கை !

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved