Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“பாஜகவின் சம்மன் கூட்டணி: அமித்ஷா வீட்டு வாசலில் எடப்பாடி பழனிசாமி தவம்” -கே.என் நேரு கடும் சாடல்

Balaji by Balaji
23/03/2026
in தமிழ்நாடு
0
KN Nehru

KN Nehru

0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

“அதிமுக கூட்டணி என்பது மறைந்து இப்போது அது பாஜக கூட்டணியாக மாறிவிட்டது. டெல்லிக்கு ஓடுவதைத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குதல் என்று சொல்கிறாரா?” என திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்றுள்ள நிலையில், அவரை விமர்சித்து கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ:

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அமித்ஷா அனுப்பியது அழைப்பா? சம்மனா?

மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்புவது போலத்தான், அமித்ஷா தற்போது எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என்பது கூட்டணிக் கட்சிகள் பரஸ்பரம் பேசி எடுக்கும் முடிவு அல்ல, இது அமித்ஷாவின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் ‘சம்மன் கூட்டணி’ என்று கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்குப் பூட்டு போடுங்கள்!

“தமிழ்நாட்டில் அதிமுகதான் கூட்டணிக்குத் தலைமை என்று தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, ஏன் இதுவரை ஒருமுறை கூட அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?” என நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

“கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிதான் மற்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், அமித்ஷா வீட்டில் காத்துக்கிடக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்திற்குப் பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டுத் தேர்தல் முடியும் வரை மூடி வைத்துவிடுங்கள்” என அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

‘ஐயா’ பட காமெடி போல இருக்கிறது!

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை நடிகர் வடிவேலுவின் திரைப்படக் காட்சியுடன் ஒப்பிட்டுள்ள நேரு, “இரவு 8:30 மணிக்குச் சந்திப்பு எனச் சொல்லிவிட்டு, இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து அமித்ஷா சந்தித்திருக்கிறார். இது ‘ஐயா’ படத்தில் அடிவாங்கிவிட்டு வெளியே வரும்போது ‘இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’ என வடிவேலு பேசும் காமெடி வசனத்தைப் போலவே பழனிசாமிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது” என்று கிண்டல் செய்துள்ளார்.

அண்ணா அதிமுகவா? அமித்ஷா அதிமுகவா?

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று முறை டெல்லி சென்றுள்ள பழனிசாமி, அதிமுகவின் அடிநாதமான கொள்கைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டதாக நேரு குற்றம் சாட்டினார். “கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களான அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் அமித்ஷாவையே சந்திக்கிறார்கள். அப்படியென்றால் இது அண்ணா பெயரிலான அதிமுகவா அல்லது அமித்ஷா பெயரிலான அதிமுகவா?” என அவர் வினவியுள்ளார்.

தமிழ்நாடு Vs டெல்லி அணி

“கட்சியையே டெல்லியில் அடமானம் வைத்த பழனிசாமி, நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டையும் அடகு வைக்கத் துணிவார். அதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலை ‘தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி’ என்று சரியாகக் குறிப்பிடுகிறார்” என்று நேரு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, மானத்தைப் பெரிதாகக் கருதும் தமிழ்நாட்டு மக்கள், இந்த ‘அடிமைக் கூட்டணிக்கு’ தேர்தலில் மரண அடி கொடுப்பார்கள் என்றும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி உறுதி என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: AIADMK BJP AllianceAmit ShahArunaithamizh NewsDelhi VisitDMK vs AIADMKEdappadi PalaniswamiKN NehruSeat Sharing TalksSevalnews UpdatesTamil Nadu PoliticsTN Election 2026
Previous Post

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved