கோவை :
வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்ததும் விசாரணையில் அம்பலமானதாகவும், இந்த குரூர கும்பலால், பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதிமுக ஆட்சியின்போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்ததால், இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேர் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட 9 பேரையும் காணொலி மூலம் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்படவர்கள் மற்றும் 48 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களும், லேப்டாப்களும் முக்கிய ஆதாரங்களாக இருந்ததாகவும், எந்தெந்த தேதிகளில் குற்றங்கள் நடந்தது என்பதை நிரூபிக்க, அவர்கள் பதிவு செய்த வீடியோக்கள் முக்கிய தடயமாக இருந்ததாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கின் தீவிரத் தன்மை கருதி, கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் பிணை வழங்காததால், 2019-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
முக்கிய வழக்கின் தீர்ப்பு நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
தீர்ப்பு
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
முக்கிய வழக்கின் தீர்ப்பு என்பதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை பிற்பகல் 12 மணிக்கு அறிவித்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை பிற்பகல் 12 மணிக்கு அறிவித்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ரூ.40,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும்.