Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்ற சீமான் கண்டனம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
06/03/2025
in தமிழ்நாடு
0
234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடுமா? சீமான் சவால்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘திருத்தணி நகரில் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது’ என்று நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கப்படும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது.

அந்த அடையாளங்கள் போதாதென்று, தமிழ்ப்பெருந்தலைவர்களுக்குத் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளச் சின்னங்களையும் அழித்தொழிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த தலைவர்களின் பெயரை மாற்றி, பராமரிப்பு என்ற பெயரில் கருணாநிதி பெயரில் திறப்பது எவ்வகையில் நியாயமாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

தமிழத்தில் 9 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகள் செய்து, பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் காமராஜருக்கு இணையான இன்னொரு முதல்வர் இன்று வரை யாரும் வரவில்லையென்று மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அந்த அளவிற்கு மிகச்சிறப்பான ஆட்சியைத் தந்த கர்மவீரர் காமராசரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஏதும் இதுவரை நிறுவப்படவில்லை என்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் பெருந்தலைவரின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

இந்த நிலையில், பெருந்தலைவரின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க முயல்வது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய தி.மு.க., அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று பூசி மொழுகியது.

அறம் சார்ந்த நல்லாட்சியின் மாட்சிமையால் மக்கள் மனதில் நீங்காது நிலைபெற வேண்டுமே தவிர, மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், மற்றவர்களின் அடையாளத்தை அழித்து, வலிந்து திணிக்கப்படும், இதுபோன்ற விளம்பர அடையாளங்கள் மண்ணிலும் நிலைக்காது! மக்கள் மனதிலும் நிலைக்காது.

ஆகவே, திருத்தணி நகரில், பெருந்தமிழர் ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவைக் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Seeman condemnsTiruttani Vegetable Market
Previous Post

எலான் மாஸ்க் சொத்து மதிப்பு சரிவு

Next Post

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க மனு

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved