தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளுக்கு தகுதியான நூல்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வரவேற்கப்படுவதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
வெளியீடு: 2025-ஆம் ஆண்டில் வெளியான படைப்புகள் மட்டுமே விருதுக்குப் பரிசீலிக்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டியவை: நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். (அனுப்பப்படும் நூல்கள் திருப்பித் தரப்பட மாட்டாது).
கடைசித் தேதி: 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
விருது விவரங்கள்:
தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூல் மற்றும் படத்திற்கும் தலா ரூ. 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.
விருதுகளின் பட்டியல்:
கே.முத்தையா நினைவு விருது – தொன்மைசார் நூல்
கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது – நாவல்
சு.சமுத்திரம் நினைவு விருது – விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
இரா.நாகசுந்தரம் நினைவு விருது – அபுனைவு நூல் (Non-Fiction)
வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் விருது – கவிதைத் தொகுப்பு
அகிலா சேதுராமன் நினைவு விருது – சிறுகதைத் தொகுப்பு
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது – மொழிபெயர்ப்பு நூல்
இராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது – குழந்தைகள் இலக்கியம் (பாடல்கள்)
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது – மொழிவளர்ச்சி நூல்
ஜனநேசன் நினைவு விருது – எழுத்தாளரின் முதல் நூல்
மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது – அறிவியல் மனப்பாங்கு நூல்
பா.இராமச்சந்திரன் நினைவு விருது – குறும்படம்
என்.பி.நல்லசிவம் – ரத்தினம் நினைவு விருது – ஆவணப்படம்
பரிந்துரைகள் வரவேற்பு:
நாட்டுப்புறக் கலை, இசை, நாடகம், நுண்கலை மற்றும் பெண்படைப்பாளுமை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கீழ்காணும் விருதுகளுக்கான பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன:
மு.சி.கருப்பையா பாரதி-ஆனந்த சரஸ்வதி நாட்டுப்புற கலைச்சுடர் விருது
மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது
த.பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது
மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண்படைபாளுமை விருது
கருப்பு கருணா நினைவு நுண்கலைச்சுடர் விருது
தொடர்பு முகவரி:
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்), மதுரை – 625001. தொலைபேசி: 0452-2341669
குறும்படம்/ஆவணப்படம் அனுப்ப: தனிநபர் இணைய இணைப்புகளை (Links) 73730 73573 என்ற புலன (WhatsApp) எண்ணிற்கு அனுப்பலாம்.



