Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தவெக பொதுக்கூட்டம்: காங்கிரஸ், திமுக, அதிமுக மீது ஆதவ் அர்ஜூனா கடும் விமர்சனம்

Balaji by Balaji
25/03/2026
in தமிழ்நாடு
0
Aadhav Arjuna
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் எழும்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ப.சிதம்பரம் “திமுகவின் விசுவாசி” என குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும் அவர் காரணம் என தெரிவித்தார். மேலும், ராகுல் காந்திக்கு நடிகர் விஜய் மீது தனிப்பட்ட விருப்பம் இருப்பதாக கூறிய அவர், சில மூத்த தலைவர்கள் தங்களின் சுயநலத்திற்காக காங்கிரஸை திமுகவுடன் இணைத்துவிட்டதாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் சுமார் 100 நிர்வாகிகள் தற்போது தவெக அலுவலகத்தில் காத்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைய உள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

திமுக குறித்து பேசிய அவர், “சென்னைக் கோட்டை” என்ற நம்பிக்கையில் திமுக இருப்பதாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தவெக பிரச்சாரத்தால் அவர்கள் பதற்றமடைந்துள்ளதாகவும் கூறினார். எழும்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ யார் என்பதை “கூகுளுக்கே தெரியாது” என கிண்டலாக குறிப்பிட்டார். மேலும், திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தங்களின் பயத்தை காட்டுவதாகவும், தற்போதைய நிலவரப்படி தவெகவுக்கு திமுகவை விட 2% அதிக வாக்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி டெல்லி செல்வதை விமர்சித்த அவர், மக்கள் அவரை மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி அரசியல் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். புதுச்சேரியில் காங்கிரஸை தோற்கடிக்க திமுக மற்றும் பாஜக இணைந்து செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் எழும்பூர் தொகுதிக்கான வேட்பாளராக ராஜ்மோகன் அறிவிக்கப்பட்டார். மேலும், செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags: Aadhav ArjunaAIADMKChennai Political MeetingCongressDMKEdappadi PalaniswamiEgmore ConstituencyElection 2026 Tamil NaduP ChidambaramPolitical Speech IndiaRahul GandhiTamil Nadu Election NewsTamil Nadu PoliticstvkVijay Party
Previous Post

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

Next Post

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி முடிவுக்கு கரணம் என்ன?

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved