நாட்றம்பள்ளி ஒன்றியம் அலசந்தாபுரம் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 20நாட்களே வேலைகொடுத்ததாக முறையிட்ட போது ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவரும் பணிதளப்பொறுப் பாளருமான சம்பத், ஊராட்சி செயலர் பிரதன், மக்கள் நலப்பணியாளர் அசோகன் ஆகியோர் பட்டிலின பெண்களை சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக, திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் திருப்பத்தூர் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்து மனு அளித்தனர்.



