திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன் கருடாழ்வார் பாப்பாத்தி அம்மன், பொப்பன்ன சுவாமி கும்பாபிஷேகம் மற்றும் பெரிய மாலை கும்பிடு பெருவிழா நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சலகெருது சாமி மாடுகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு பாரம்பரிய சலகெருது சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. முதலில் வந்த சாமாநாயக்கர் சாமி மாட்டுக்கு மாலை மரியாதை வேட்டி ரூ 1100 ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



