Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விஜய் பிரசாரத்தில் நெரிசல் 39 பேர் பலி 8 குழந்தைகள், 17 பெண்கள் உயிரிழந்த சோகம்:

நள்ளிரவில் விரைந்து வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

admin by admin
28/09/2025
in செய்திகள், தமிழ்நாடு
0
விஜய் பிரசாரத்தில் நெரிசல் 39 பேர் பலி 8 குழந்தைகள், 17 பெண்கள் உயிரிழந்த சோகம்:
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கரூரில் நேற்றிரவு நடந்த விஜய்பிரசாரத்தில் 8 குழந்தைகள் 17 பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ல் அப்பகுதியில் பெரும்பரபரப்புநிலவுகிறது.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் நேற்று இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது.

விஜய் பேசும்போது, மணல் கொள்ளை, மணல் குவாரி, கனிமவள கொள்ளை உள்ளிட்ட உள்ளூர் விசயங்களில் அதிக கவனம் செலுத்தி பேசினார். தொடர்ந்து அவர். 6 மாதங்களில் ஆட்சி மாறும் காட்சி மாறும். அதிகாரம் கை மாறும் என்றும் பேசினார்.

இந்த நிலையில், திடீரென பிரஇந்த நிலையில், திருரென் ஏற்பட்டது. இதில், சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை நிர்வாகிகள் தூக்கிச் சென்றனர். அவர்களை மீட்பதற்காக ஆம்புலன்சுகள் வரிசையாக வந்தன. எனினும், கூட்ட நெரிசலால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு கரூர் போலீஸ் சூப்பிரெண்டு சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களை பிரசார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அவர்கள், சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கூட்ட நெரிசலால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலர் மயக்கம் அடைந்தனர். சிறுவர். சிறுமிகளை பெற்றோர் தூக்கி சென்றனர். குழந்தைகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இதில் 8 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் பலியானார்கள். மயங்கி விழுந்த மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று விருநின்றனர்.

விஜய் மைக் பிடித்து பேசியதோ, பத்து நிமிடங்களை நெருங்கியதா என்றால் அது கேள்விக்குறியே? ஆனால், அந்தக் குறுகிய காலத்துக்குள், (அதாவது விஜய்யின் வாகனம் வந்து நின்றது முதல் அவர் வாகனத்தின் மேலே ஏறி, அதன்பின் பேசி முடித்துக் கொண்டு திரும்பியது வரை…) அதற்குள் அந்த இடமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உருமாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அவரை காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது.
முதலில் 10 பேர் பலியானதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உறுதிபடுத்தினார். மருத்துவமனைக்கு வரும்போதே பலர் இறந்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விரைந்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியனையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுருந்தியுள்ளேன்
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

கரூர் வந்தார் முதல்வர் ஸ்டாலின்
இதற்கிடையே நள்ளிரவே கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மிகுந்த துயரத்துடனும், கனத்த இதயத்துடனும் உங்கள் முன்னால் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

கரூரில் நடந்திருக்கும் இந்த கொடூரமான விபத்து குறித்து விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு சோகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து விவரமாக சொல்ல முடியாத நிலையில், நானும் வேதனையில் இருக்கிறேன். நேற்று இரவு 7.45 மணி அளவில் சென்னையில் நான் அதிகாரிகளுடன் இருக்கும்போது, கரூரில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதாக எனக்கு செய்தி கிடைத்தது. உடனே கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க சொன்னேன்.
மாவட்ட ஆட்சியரிடம்கேட்டபோது அவர் சில விஷயங்களை சொன்னார். அடுத்த 5 நிமிடத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வந்தன. அதன்பிறகு மரண செய்திகள் வந்தன. இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மரண செய்தி வந்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே மாவட்டத்தைச் சுற்றியுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு, கரூருக்கு போக சொல்லி உத்தரவிட்டேன். அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டேன்.

தலைமை செயலகத்தில் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினேன். இந்த சம்பவத்தில் மொத்தம் இதுவரை 39 உயிர்களை இழந்துள்ளோம். ஆண்கள் 13, பெண்கள் 17, ஆண் குழந்தைகள் பேர், பெண் குழந்தைகள் 5 பேர் என 39 உயிர்கள் பறிபோயுள்ளன. அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இதுவரை நடக்காதது. இனிமேல் நடக்க கூடாது. மேலும் $1 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்து போனவர்களின் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டும் என எனக்கு தெரியவில்லை. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளேன். காலை 9.30 மணிக்கு வரலாம் என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால், இந்த கொடூரமான காட்சிகளை பார்த்ததும், மனது கேட்கவில்லை. அதனால் நள்ளிரவு 1 மணி அளவில் விமானத்தில் பயணித்து இங்கு வந்து சேர்ந்துள்ளேன்” என்றார்.

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – விஜய்

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தாங்க முடியாத. வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிலில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

Tags: கரூர் மாவட்டம்த.வெ.க தலைவர் விஜய்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்விஜய் பிரசாரத்தில் நெரிசல் 39 பேர் பலி
Previous Post

சாத்தனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Next Post

ஜனாதிபதி, மோடி, எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved