கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஈ.கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது.
திட்டக்குடி வட்டாட்சியர் உதயகுமார் தலைமையில் நடந்த இந்த முகாமில், ஈ.கீரனூர், கல்லூர், பெருமுளை, புலிவலம், மேலாதனூர், ஐவனூர், செவ்வேரி, ஆலம்பாடி ஆகிய எட்டு ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்து கொண்டு கலந்துகொண்டனர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முகாமில் ரூ.66.89 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர்,கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சபிதா, மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சண்முகசிகாமணி, மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



