காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கான திருப்பணிகள் கு.29 கோடியில் நிறைவுபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதிகள் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பஞ்சபூததலங்களில் ‘மண்’ (பிரித்வி) தலமாகப் போற்றப்படும் கோவில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வரலாற்றுப் பெருமையும், புராணச் சிறப்பும் வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்தக் கோவிலுக்கு சுமார் ரூ.29 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்லாப்பட்டன.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நவகுண்ட குடமுழுக்கு விழாவுக்காகன பிரம்மாண்டமானயாகசாலை அமைக்கப்பட்டது. இதில் 70 சிவாச்சாரியார்கள் மற்றும் 170 வேத விற்பன்வர்கள் பங்கேற்க, கடந்த 4ம் தேதி விக்வேசுவர பூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் 20க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்ற திருமுறைப் பாராயணம் மற்றும் விசேஷ யாகபூஜைகள் நடைபெற்ற குடமுழுக்கு மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவையொட்டி அதிகாலை மணியளவில் யாகசாலையிலிருந்து மேள தாளங்கள், சிவ வாந்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இதனை தொடர்த்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பிடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், மூலவர் கோபுரம் மற்றும் மஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ‘ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பினர். ‘அரோகரா’ எனவும் எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணை எட்டியது. தொடர்ந்து மூலவருக்கும். பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், மகா பாராதனைகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் காஞ்சிபுரம் தொள்டை மண்டல ஆதீனம் ஸ்ரீ சிதம்பரநாத சுவாமிகள், தருமபுரம் ஆனேம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, காஞ்சியாம் சட்டப்பேரவை உறுப்பினர் எழியரசன் மற்றும் நீதித்துறை நடுவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை விழாவுக்கான கோயில் அறங்காவலர் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், அறநிலையத்துறை ஆணையர் சி.குமரதுரை, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்து இணை கே.சண்முகம் ஆயிரத்துக்கும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் தலைமையில் மேற்பட்ட வண்ண ஈடுபட்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு இடங்களில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



