Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in ஆன்மீகம்
0
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. விழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. விழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

AlsoRead

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருச்செந்தூர் கோயிலில் மலேசியா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கடந்த 6 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையில் 4000க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண செல்லும் பக்தர்களுக்கு தனியாக வரிசைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று சிறப்பு ரயில், பஸ்கள் இயக்கம்
கந்த சஷ்டி திருவிழாவுக்காக சென்னை தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நேற்று 6ம்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் இன்று காலை 8.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேருகிறது. மறு மார்க்கத்தில் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து இன்று (7ம் தேதி) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, நாளை காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் போய் சேரும். இந்த சிறப்பு ரயிலில் பொதுப்பெட்டிகள் அதிகம் இடம் பெற்றிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் பக்தர்கள் பயணம் செய்ய வசதியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன

Tags: ஆன்மிகம்
Previous Post

நாளை வெள்ளோட்டம்: திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம்!

Next Post

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

Related Posts

Thiruayippadi Balukandeeswarar Temple

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

03/03/2026
அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

26/01/2026

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

25/01/2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

09/12/2025

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

06/12/2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா

24/11/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved