Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை அடுத்த இராந்தம் கிராமத்தில் பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
16/12/2023
in Uncategorized
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், இராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகனுக்கு வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாவலர் வையவன், ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த மன்னார்சாமி ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர்கள் கூட்டாக ஆய்வு செய்தனர்.

AlsoRead

“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுது பாஜக” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை; திமுக போராட்டம்

VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வான் பாதுகாப்பு துறையில் புதிய புரட்சி!

வங்கதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் நில அதிர்வு – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

இராந்தம் கிராமத்தில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு இடங்களில் 4 நடுகற்கள் கண்டறியப்பட்டன. அதில் ஒன்று ஊரின் நடுவே உள்ள விநாயகர் கோயில் அருகில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த நடுகல்லை ஊர் மக்கள் உதவியுடன் வெளியே எடுத்து சீரமைத்து கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபல் அவர்கள் படித்தளித்ததில் இக்கல்வெட்டு பல்லவ மன்னன் நந்தி வர்மன்  காலத்தியது என்றும் இக்கல்வெட்டு வட்டடெழுத்து தமிழில் உள்ளது என்றும் இதில் நந்தி வர்மனின் 28 ஆவது ஆட்சியாண்டில் மண்டை குளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் பூசலில் இறந்து பட்டான் என்று குறிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பிடப்படும் நந்தி வர்மன் என்பது வட்டெழுத்து அமைதியைக் கொண்டும், ஆட்சியாண்டைக் கொண்டும்,  இரண்டாம் நந்தி வர்மன் (கி.பி. 759) காலத்தியதாக குறிக்கலாம். இதில் குறிப்பிட்டுள்ள மண்டைகுளநாடு என்பது தற்போது போளுர் அருகே மண்டகுளத்தூர் என்று அழைக்கப்படும் ஊரானதாகும். 7, 8 ஆம் நூற்றாண்டில் மண்டை குளநாட்டின் தலைநகராக இருந்துள்ளது. இந்த நாட்டுக்கு உட்பட்ட இராந்தம் பகுதியில் நடைபெற்ற கால்நடைகளைக் காக்கும் போரில்  மண்டைகுளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் இறந்துள்ளார். அதன் நினைவாக இக்கல் நடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற நடுகற்களில் காணப்படும் இறந்த போன வீரனின் உருவம் இந்த நடுகல்லில் இல்லை. எழுத்து மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் உள்ள நடுகல்லும் மண்டைகுள நாட்டைச் சேர்ந்ததாகும். எனவே மண்டைகுளநாடு என்பது போளூர் திருவண்ணாமலைக்கு இடைப்பட்ட பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் தற்போது கிடைத்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு மற்றும் அவ்வூரில் கிடைக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடு ஆகியவற்றை கொண்டு இப்பகுதி தொன்மையான பகுதி என்றும் தெரியவருகிறது.  தமிழக வரலாற்றுக்கு முக்கிய பங்களிக்கும் இது போன்ற நடுகற்களை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Previous Post

குபேர லிங்கத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த குபேரர்

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

Related Posts

Anti-Hindi Protest

“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுது பாஜக” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை; திமுக போராட்டம்

04/03/2026
VSHORADS Missile Test

VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வான் பாதுகாப்பு துறையில் புதிய புரட்சி!

28/02/2026

வங்கதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் நில அதிர்வு – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

28/02/2026

‘அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம்’

10/12/2025

140 ஆண்டு கால ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை..

21/11/2025

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் குடும்பத்தில் திருமண வரவேற்பு

28/09/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved