Saturday, July 25, 2026
31 °c
Tiruvannamalai
32 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

admin by admin
25/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காவிரி நீர் உரிமை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் கர்நாடகா செல்லும் முயற்சியை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்வையும் அளிக்காததால், சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனையை கடந்த காலங்களில் தி.மு.க. அரசு தொடர்ந்து நிராகரித்ததாகவும், கர்நாடக அரசு பேச்சில் ஒன்று, செயல்பாட்டில் ஒன்று என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணைத் திட்டம் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான காவிரி நீர் உரிமையை பாதிக்கும் முயற்சி என்றும், இதுகுறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயன் இல்லை என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் அழைத்தபோதும், முதல்வராக இருந்த காலத்தில் மேகேதாட்டு குறித்து பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தாம் மறுத்ததாகவும், அப்போதைய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

AlsoRead

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது தமிழ்நாட்டின் 30 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை தொடர்பான எந்த முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்பு, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கருத்துகளை தமிழக அரசு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, காவிரி உரிமை தொடர்பாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: காவிரி உரிமைமு.க.ஸ்டாலின்முதல்வர் விஜய்
Previous Post

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

Next Post

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

Related Posts

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026
பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

25/07/2026

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

25/07/2026

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

24/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
  • 88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved