Monday, September 14, 2026
33 °c
Tiruvannamalai
29 ° Tue
29 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

admin by admin
28/07/2026
in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
0
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்று ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு ‘வி த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உச்ச நீதிமன்றம் கடந்த 16.02.2018 அன்று வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு காவிரி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகேதாட்டு அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, கீழ்ப்பகுதி மாநிலங்களின் குறிப்பாக தமிழகத்தின் ஒப்புதல் இன்றி காவிரியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

“தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து திடீரென பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முக்கியமான விவகாரங்களில் மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி

முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி, “2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில், காவிரியின் குறுக்கே கர்நாடகா எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? கர்நாடகா இதற்கான ஒப்புதலை பெற்றுள்ளதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி, “2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை” என தெரிவித்தார்.

மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், அந்தந்த மாநில எல்லைக்குள் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக காவிரி நீரை பயன்படுத்திக் கொள்ளவும், திட்டங்களை மேற்கொள்ளவும் கட்டுப்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், பிலிகுண்டுலுவில் நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்து அளவுக்கும், உண்மையில் வந்த நீரின் அளவுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: அண்ணாமலை கண்டனம்மத்திய அரசுமேகேதாட்டு அணை
Previous Post

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

Next Post

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved