Thursday, July 30, 2026
37 °c
Tiruvannamalai
33 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம்

முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

admin by admin
30/07/2026
in தமிழ்நாடு
0
சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆஸ்திரேலியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் நிறுவ உள்ளது. தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாக இது அமையவுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் முன்னிலையில் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

ரூ.125 கோடி முதலீட்டில் உருவாகவுள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக வளாகம் மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-இல் 77-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம் தமிழ்நாட்டில் தனது உலகளாவிய திறன் மையத்தை அமைக்கிறது. இதன் மூலம் 220 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்து 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது.

அதேபோல், தென் கொரியாவின் மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் வாகன உதிரிபாக உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

AlsoRead

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

மொத்தமாக ரூ.725 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள் மூலம் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகள் தமிழ்நாட்டை உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளின் முக்கிய மையமாக மாற்றும் என்றும், முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் கீர்த்தனாஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம்முதல்வர் விஜய்
Previous Post

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

Next Post

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

Related Posts

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

30/07/2026
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

30/07/2026

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

30/07/2026

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜிங்க்ய ரஹானே ஓய்வு அறிவிப்பு
  • அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு
  • மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு
  • டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • தங்கம் விலை மீண்டும் உயர்வு:

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved